முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் மாத ஞாயிற்றுகிழமைகளில் டாஸ்மாக் மூடல்!

 

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் மாத ஞாயிற்றுகிழமைகளில் டாஸ்மாக் மூடல்!

தமிழகத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் ஓரளவு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 40 நாட்களில் அதாவது மே 7ம் தேதி தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்ததால் சென்னையில் மட்டும் திறக்கப்படவில்லை.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் மாத ஞாயிற்றுகிழமைகளில் டாஸ்மாக் மூடல்!

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழுபொதுமுடக்கம் என்பதால் ஆகஸ்ட் மாதத்தில் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.