×

செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால், பள்ளி மாணவன் தற்கொலை!

திருச்சி திருச்சியில் செல்போன் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி கிராப்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மகன் கீர்த்திவாசன்(15). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், செல்போன் விளையாட்டுகளில் மூழ்கிக் கிடந்த கீர்த்திவாசன், சரிவர உணவருந்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கீர்த்திவாசனை, அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட
 

திருச்சி

திருச்சியில் செல்போன் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி கிராப்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மகன் கீர்த்திவாசன்(15). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், செல்போன் விளையாட்டுகளில் மூழ்கிக் கிடந்த கீர்த்திவாசன், சரிவர உணவருந்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கீர்த்திவாசனை, அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட கீர்த்திவாசன், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை பெற்றோர் எழுந்து பார்த்தபோது அவர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.தகவலின் பேரில் எடலைப்பட்டி புதூர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.