×

காதலித்த சிறுமியுடன் மகன் ஓட்டம்… போலீஸ் விசாரணையால் மனமுடைந்த தாய் தற்கொலை!

சேலம் சேலத்தில் 16 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் போலீசார் விசாரணைக்கு சென்ற பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொணட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகருக்கு உட்பட்ட அன்னதானபட்டியை சேர்ந்தவர் சம்பூர்ணம். இவருக்கு அஜித்குமார் உள்பட 3 மகன்களும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில், சம்பூரணம் கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்த்து வந்தார். அஜித்குமார் செவ்வாய்பேட்டையில் பார்சல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, உடன் புரிந்த 16
 

சேலம்

சேலத்தில் 16 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் போலீசார் விசாரணைக்கு சென்ற பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொணட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாநகருக்கு உட்பட்ட அன்னதானபட்டியை சேர்ந்தவர் சம்பூர்ணம். இவருக்கு அஜித்குமார் உள்பட 3 மகன்களும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில், சம்பூரணம் கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்த்து வந்தார். அஜித்குமார் செவ்வாய்பேட்டையில் பார்சல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, உடன் புரிந்த 16 வயது சிறுமியுடன் அவருக்கு காதல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி அஜித்குமார், சிறுமியை அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செவ்வாய்பேட்டை போலீசார், அஜித்குமாரின் தாய் சம்பூரணம் மற்றும் அவரின் 2 தம்பிகளை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின்போது, உதவி ஆய்வாளர் ராஜா என்பவர், சம்பூரணத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த சம்பூரணம் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சம்பூரணத்தின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர், இன்று சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, உதவி ஆய்வாளர் தாக்கியதாலேயே சம்பூரணம் உயிரிழந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனை அடுத்து, போராட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால், அவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக சேலம் லைன்மேடு பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.