×

கடன் தொல்லையால் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை!

கன்னியாகுமரி நாகர்கோவிலில் கடன் தொல்லையால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவில் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பொன்னையா (65). கூலி தொழிலாளி. மதுப் பழக்கத்திற்கு அடிமையான பொன்னையா, பலரிடமும் கடன் பெற்றுள்ளார். ஆனால் அவர் பணத்தை முறையாக திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு, அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். கடனை செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்து வந்த பொன்னையா நேற்று
 

கன்னியாகுமரி

நாகர்கோவிலில் கடன் தொல்லையால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பொன்னையா (65). கூலி தொழிலாளி. மதுப் பழக்கத்திற்கு அடிமையான பொன்னையா, பலரிடமும் கடன் பெற்றுள்ளார். ஆனால் அவர் பணத்தை முறையாக திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு, அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். கடனை செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்து வந்த பொன்னையா நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென மாயமாகினார். இதனால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சரலூர் மயானத்தில் உள்ள மரத்தில் பொன்னையா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த கோட்டாறு போலீசார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.