×

வனிதா கணவர் பீட்டர் பாலுக்கு திடீர் நெஞ்சுவலி : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

நடிகை வனிதா விஜயகுமார் தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த பின் தனது மகள்களுடன் வசித்து வந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டதால் தற்போது யூடியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கி, தனது சமையல் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். இதையடுத்து கடந்த ஜூன் 27 ஆம் தேதி நடிகை வனிதா இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே
 

நடிகை வனிதா விஜயகுமார் தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த பின் தனது மகள்களுடன் வசித்து வந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டதால் தற்போது யூடியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கி, தனது சமையல் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.

இதையடுத்து கடந்த ஜூன் 27 ஆம் தேதி நடிகை வனிதா இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே எலிசபெத் ஹெலன் என்ற மனைவியும், மகனும் உள்ளதால் இந்த விவகாரம் விவாத பொருளானது. கடந்த சில நாட்களாக பீட்டர் பால் – வனிதா செய்தி சற்று ஓய்ந்து இருந்தது.

இந்நிலையில் பீட்டர் பால் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.