×

வசீகரம் மிக்க ரிஷப ராசிக்காரர்கள்! – பொதுவான குணநலன்

பழக இனிமையான, தலைமைப் பண்பு மிக்க ரிஷப ராசிக்காரர்களின் பொதுவான குணநலன்கள் பற்றிப் பார்ப்போம். அதிபதி: சுக்கிர பகவான் நட்சத்திரங்கள்: கிருத்திகை 2ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் வலிமை: நம்பகம், பொறுமை, பக்தி மிக்கவர்கள் பலவீனம்: பிடிவாதம், அதீத பிடிப்பு, விட்டுக்கொடுக்காமை பொதுவான குணநலன்கள்: ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் அமைதியானவர்கள். உண்மை, கள நிலவரம் தெரிந்து அதற்கு ஏற்ப வாழ்பவர்கள். பலன்களை அறுவடை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். தன்னைச் சுற்றி அன்பு, அழகு,
 

பழக இனிமையான, தலைமைப் பண்பு மிக்க ரிஷப ராசிக்காரர்களின் பொதுவான குணநலன்கள் பற்றிப் பார்ப்போம்.

அதிபதி: சுக்கிர பகவான்

நட்சத்திரங்கள்: கிருத்திகை 2ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்

வலிமை: நம்பகம், பொறுமை, பக்தி மிக்கவர்கள்

பலவீனம்: பிடிவாதம், அதீத பிடிப்பு, விட்டுக்கொடுக்காமை

பொதுவான குணநலன்கள்:

ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் அமைதியானவர்கள். உண்மை, கள நிலவரம் தெரிந்து அதற்கு ஏற்ப வாழ்பவர்கள். பலன்களை அறுவடை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். தன்னைச் சுற்றி அன்பு, அழகு, காதல் இருக்க வேண்டும் என்று கருதுவார்கள். உணர்ச்சிக்கு அடிமையானவர்கள். சிற்றின்பத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். சின்ன சின்ன விஷயத்தையும் கொண்டாடுவார்கள்.

கம்பீரமானவர்கள், இயற்கையாகவே அமைதியான குணம் மிக்கவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் உதவி கேட்க தயங்குவார்கள். சுதந்திரத்தை விரும்புவார்கள். குடும்பத்துக்கு முன்னுரிமை அளிப்பார்கள். குடும்பத்தினர் மீது அதீத பாசம், அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவார்கள். அனைத்தையும் அலசி ஆராய்ந்து எது சரி என்று படுகிறதோ அதை செய்வார்கள். குழந்தைகளுக்கு சுதந்திரம் அளிப்பார்கள். அவர்களை உற்சாகப்படுத்தி முன்னேற்றப்பாதையில் பயணிக்க ஊக்குவிப்பார்கள்.

சிற்றின்பத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்பதால் உணவு விஷயத்தில் அதிக எதிர்பார்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். உணவு சுவையாக இருந்தால் இவர்களை எளிதாக வசப்படுத்திவிடலாம். வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்களை அழைத்து விருந்து கொடுப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எந்த அளவுக்கு மென்மையானவர்களோ அந்த அளவுக்கு உறுதியானவர்களும் கூட. எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார்கள். அதுவே பிரச்னையாகவும் அமைந்துவிடும். பிரச்னைகளை கண்டு பயப்படாமல் எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவர்கள்.

மற்ற ராசிக்காரர்கள் பற்றிய பொதுவான பலன் பற்றி தொடர்ந்து காண்போம்.

மேஷம் I ரிஷபம் I மிதுனம்