வைராக்கியம் மிக்க மேஷ ராசிக்காரர்கள்! – பொதுவான குண நலன்

 

வைராக்கியம் மிக்க மேஷ ராசிக்காரர்கள்! – பொதுவான குண நலன்

நாம் பிறந்த தேதி, நேரம் அடிப்படையில் நம்முடைய ராசி நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தினப் பலன், வாரப்பலன், மாதப்பலன், ஆண்டு பலன், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி பலன்களை பார்த்து வருகிறோம்.

வைராக்கியம் மிக்க மேஷ ராசிக்காரர்கள்! – பொதுவான குண நலன்

ஒரு சிலருக்கு ராசிக்குரிய அதிபதி உள்ளிட்ட விவரங்கள் தெரியலாம். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு ராசியின் குண நலன்கள் பற்றி தெரியாது. ஒவ்வொரு ராசிக்குமான பொதுவான பலன்களைத் தெரிந்துகொள்வோம்.

அதிபதி:  செவ்வாய்

நட்சத்திரங்கள்: அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம்

பொதுவான குண நலன்கள்:

இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும், வைராக்கியமும் மிக்கவர்கள். நேர்மையானவர்கள். பொய், பித்தலாட்டத்தை விரும்பாதவர்கள். மற்றவர்கள் கஷ்டப்படுவதை காண சகிக்காதவர்கள். உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். இயற்கையை ரசிப்பவர்கள்.

வெற்றி பெறுவது ஒன்றே குறிக்கோளாக கொண்டவர்களாக இருப்பர். இதனால்தான், தலைமைப் பொறுப்பில் உள்ள பெரும்பாலானவர்கள் மேஷ ராசிக்காரர்களாக உள்ளனர். அனைத்திலும் முன்னோடிகளாக இருப்பார்கள். புது அனுபவங்களை முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். ரிஸ்க் எடுப்பது எல்லாம் இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போலத்தான்.

தோற்றத்தைப் பொறுத்தவரை உயரமாகவும் கம்பீர மிக்கவர்களாகவும் இருப்பார்கள். நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் உடையவர்களாக இருப்பார்கள். தெய்வபக்தி உள்ளவர்கள். அதே நேரத்தில் அவசரக்காரர்களாக இருப்பார்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யாவிட்டால் தூக்கம் வராது. கோபம் அதிகம் வரும். யாரிடமும் ஆலோசனை செய்து முடிவெடுக்கும் பழக்கம் இருக்காது.

சிலர் அகங்கார குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் மேஷ ராசிக்காரர்கள் என்றும் உண்மையானவர்களாக இருப்பார்கள். தங்கள் வாழ்நாள் இறுதி வரை!

மற்ற ராசிகளின் பொதுப் பலன்கள்:

ரிஷபம்