எப்போதும் சிந்தனையிலேயே இருக்கும் மிதுன ராசிக்காரர்கள்! – பொதுவான குணநலன்

 

எப்போதும் சிந்தனையிலேயே இருக்கும் மிதுன ராசிக்காரர்கள்! – பொதுவான குணநலன்

வெளிப்படையான புத்திசாலித்தனமான எப்போதும் எதிலும் துணை தேடும் மிதுன ராசிக்காரர்கள் பற்றிய குணநலன்களைக் காண்போம்.

அதிபதி: புதன்

எப்போதும் சிந்தனையிலேயே இருக்கும் மிதுன ராசிக்காரர்கள்! – பொதுவான குணநலன்

பலம்: மென்மையானவர்கள், பாசமுள்ளவர்கள், ஆர்வ மிக்கவர்கள், எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர்கள், எந்த சூழலுக்கும் தகவமைத்துக்கொள்ளக் கூடியவர்கள், யோசனைகளை பரிமாறுபவர்கள்.

பலவீனம்: பதற்றம், நிலையின்மை, அதிக சந்தேகம்

நட்சத்திரம்: மிருகசிரீஷம் 3ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை

பொதுவான பலன்கள்:

வெளிப்படையான மற்றும் புத்திசாலித்தனம் மிக்க என இரண்டு வெவ்வேறு ஆளுமைகளை மிதுனம் குறிக்கிறது. அதாவது, எந்த ஒரு விஷயத்திலும் எதை மேற்கொள்ளப் போகின்றீர்கள் என்ற தெளிவற்ற மனநிலை கொண்டவராக இருப்பார்கள். எந்த ஒரு முடிவையும் உறுதியுடன் எடுக்க முடியாமல் குழம்பிக் கிடப்பார்கள்.

எப்போதும் ஒரு வித சிந்தனைக்கு உட்பட்டவராக இருப்பார்கள். சிந்தனைகளைச் செயல்படுத்த விரும்புவார்கள். எதையும் புரிந்துகொண்டு செயல்படுவார்கள்.

இவர்கள் எப்போதும் தன்னுடைய சரி பாதியைக் காணவில்லை என்ற உணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள். எனவே, புதிய நண்பர்கள், வழிகாட்டி என மற்றவர்களுடன் பேச, தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதில் நாட்டம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

மிதுன ராசிக்காரர்கள் திறந்த மனநிலை கொண்டவர்கள். எளிதில் சூழலுக்கு ஏற்ப மாற்றம் அடைந்துவிடுவார்கள். எனவேதான் சிறந்த எழுத்தாளர்களாக, கதாசிரியராக, பத்திரிகையாளராக, கலைத் துறையைச் சார்ந்தவராக இவர்களால் வர முடியும். கலைத் துறை மட்டுமல்ல வர்த்தகம், விளையாட்டு என எந்த துறையில் இறங்கினாலும் இவர்களால் சாதிக்க முடியும். புதிய புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர்கள். எளிதில் சோர்ந்து போக மாட்டார்கள்.

கொஞ்சம் குழந்தைத்தனமானவர்களாக இருப்பார்கள். கேளிக்கையை விரும்புவார்கள். அறிவார்ந்த விவாதங்களை ஆர்வமுடன் எதிர்கொள்வார்கள்.

குடும்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தை, மனைவி, பெற்றோர் என குடும்பத்தினருடன் நெருங்கிய உணர்வுப்பூர்வமான உறவு இருக்கும். கணவன் – மனைவி இடையே அதிகப்படியான எதிர்பார்ப்பு இருக்கும். இவர்களுடன் நெருங்கிப் பழகினால் மட்டுமே இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும்.

மேஷம் I ரிஷபம் I மிதுனம் I