×

மனித நேயம், உதவும் குணம் மிக்க கடக ராசிக்காரர்கள்! – பொதுவான குணநலன்

அமைதி, ஒழுக்கம், மனித நேயம் மிக்க கடக ராசிக்காரர்கள் பற்றி பொது பலனைக் காண்போம். அதிபதி: சந்திரன் பலம்: உறுதி, அதிக கற்பனை வளம், நம்பிக்கை, உணர்ச்சி, இரக்கம் பலவீனம்: மனநிலை, அவநம்பிக்கை, சந்தேகம், கையாளும் திறன், பாதுகாப்பின்மை விருப்பம்: கலை, வீட்டிலேயே பொழுதுபோக்குவது, கடல், ஆறு என நீர்நிலைக்கு அருகே ஓய்வு எடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது, நல்ல உணவை ருசிப்பது வெறுப்பு: புதியவர்கள், விமர்சனம், தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்களுடன் பகிர்வது நட்சத்திரம்: புனர்பூசம் 4-ஆம் பாதம்
 

அமைதி, ஒழுக்கம், மனித நேயம் மிக்க கடக ராசிக்காரர்கள் பற்றி பொது பலனைக் காண்போம்.

அதிபதி: சந்திரன்

பலம்: உறுதி, அதிக கற்பனை வளம், நம்பிக்கை, உணர்ச்சி, இரக்கம்

பலவீனம்: மனநிலை, அவநம்பிக்கை, சந்தேகம், கையாளும் திறன், பாதுகாப்பின்மை

விருப்பம்: கலை, வீட்டிலேயே பொழுதுபோக்குவது, கடல், ஆறு என நீர்நிலைக்கு அருகே ஓய்வு எடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது, நல்ல உணவை ருசிப்பது

வெறுப்பு: புதியவர்கள், விமர்சனம், தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்களுடன் பகிர்வது

நட்சத்திரம்: புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய

புரிந்துகொள்ள முடியாத மிகவும் சிக்கலான ராசிக்காரர்கள் கடக ராசிக்காரர்கள்தான். மிகவும் எமோஷனாலானவர்கள், மிகவும் சென்சிடிவானவர்கள். குடும்பம், உறவுகள் என்று வந்து வந்துவிட்டால் அவர்களுக்காக உயிரையும் கொடுப்பவர்களாக இருப்பார்கள். தனக்கு நெருக்கமானவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். மிகவும் நேர்மையானவர்கள், அனைவர் மீதும் இரக்கம் கொண்டவர்கள்.

உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு வழிநடத்தப்படுவார்கள். தங்கள் மூளை சொல்வதை இல்லை, மனம் சொல்வதையே கேட்பார்கள். ஒளிவு மறைவற்றவர்கள். பொறுமை கொஞ்சம் குறைவு. மிக விரைவாக மற்றவர்களுக்கு உதவுவார்கள். பிரச்னையை விரும்ப மாட்டார்கள். அதே நேரத்தில் பிரச்னை வந்துவிட்டால் தன்னை விட பல மடங்கு பெரிய, ஆற்றல் மிக்கவர்களாக இருந்தாலும் விடமாட்டார்கள்.

தன்னுடைய துணைவரை மிகவும் நேசிப்பவராக இருப்பார்கள். பயணம் அதிகம் மேற்கொள்வார்கள். பொறுப்பு முழுவதையும் துணைவரிடம் விட்டுவிட்டு சுதந்திரமாக இருப்பார்கள். துணைவர் தனக்கு மட்டுமே என்ற உணர்வு மிக்கவர்கள். அடுத்தவரிடம் பேசுவதைக் கூட விரும்பமாட்டார்கள்.

எந்த துறையில் நுழைந்தாலும் அங்கு ஆளுமை அதிகாரத்தை நிலைநிறுத்துவார்கள். விவேகம், அன்பான பேச்சு காரணமாக அனைவரையும் தன் வசப்படுத்திவிடுவார்கள். ஒருவரின் மனதை சந்திரன்தான் நிர்ணயம் செய்கிறது. ராசி அதிபதியே சந்திரன் என்பதால் இவர்கள் விரைவில் மற்றவர்களின் மனதில் இடம்பிடித்துவிடுவார்கள்.

கற்றல், கற்பித்தல் என இரண்டிலும் ஈடுபாடு கொண்டவர்கள். முதுமையானாலும் புதிதாக ஒரு விஷயத்தைக் கற்க வேண்டும் என்றால் உடனே முன் வருவார்கள்.

மிகவும் சென்சிடிவாக இருப்பது, உடனுக்குடன் மனநிலையில் மாற்றம் கொள்வது, மற்றவர்களை பழிவாங்க நினைப்பது போன்ற சில கெட்ட குணங்கள் இவர்களுக்கு இருக்கும்.

மேஷம் I ரிஷபம் I மிதுனம் I கடகம்