தடுமாறிய குட்டி ஏர்கிராஃப்ட்டை பத்திரமாக தரையிறக்கிய நடிகர் அஜித் : வைரல் வீடியோ!

 

தடுமாறிய குட்டி ஏர்கிராஃப்ட்டை பத்திரமாக தரையிறக்கிய நடிகர் அஜித் : வைரல் வீடியோ!

தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் அஜித் சினிமாவை தாண்டி ட்ரோன், பைக் ரேஸ் , குட்டி ஏர்கிராஃப்ட் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தடுமாறிய குட்டி ஏர்கிராஃப்ட்டை பத்திரமாக தரையிறக்கிய நடிகர் அஜித் : வைரல் வீடியோ!

அதனால்தான் இவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி தக்ஷா குழுவுக்கு வழிகாட்டியாக உள்ளார். அஜித்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட டிரோன்கள் சமீபத்தில் சென்னையில் கிருமி நாசினி தெளிக்க பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஏர் கிராஃப்ட்டை அஜித் தரையிறக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. கட்டுக்குள் வராமல் தரையிறங்கும் இடத்தைவிட்டு விலகிச் சென்ற அந்த ஏர்கிராஃப்ட்டை அஜித் கவனமாக செயல்பட்டு சரியாக தரை இறக்கும் காட்சி தற்போது அவரது ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.