`கொரோனாவை தடுக்க அஜித் கொடுத்த ஐடியாவை செயல்படுத்தினோம்!’- சென்னை மருத்துவர் புது தகவல்

 

`கொரோனாவை தடுக்க அஜித் கொடுத்த ஐடியாவை செயல்படுத்தினோம்!’- சென்னை மருத்துவர் புது தகவல்

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் ஐடியாவை நடிகர் அஜித்தான் கொடுத்தார் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

`கொரோனாவை தடுக்க அஜித் கொடுத்த ஐடியாவை செயல்படுத்தினோம்!’- சென்னை மருத்துவர் புது தகவல்

கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா தொற்று பரவியது. போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் அரசு விழித்துக்கொள்ளவில்லை. தொற்று அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தியது. தமிழகத்தில் ஊடரங்கு அமல்படுத்த முடிவு செய்த நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் முண்டியடித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்தனர். இதுவே கொரோனா தொற்று அதிகரித்து காரணமாக அமைந்துவிட்டது.

மேலும், கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா பரவியத்தையடுத்து மூடப்பட்டது. கூட்டம் அதிகமாக கூடும் இடங்களை மூட தமிழக அரசு கவனம் செலுத்தாத நிலையில் சென்னையில் கொரோனா மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலங்களில் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்ட மருத்துவர் கார்த்திகேயன் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் ஐடியாவை கொடுத்தவர் நடிகர் அஜித்தான் என்று தற்போது கூறியுள்ளார்.

`கொரோனாவை தடுக்க அஜித் கொடுத்த ஐடியாவை செயல்படுத்தினோம்!’- சென்னை மருத்துவர் புது தகவல்

அரை மணி நேரத்தில் 16 லிட்டர் கிருமிநாசினி தெளிக்கும் திறன் கொண்ட ட்ரோன்களைத்தான் அஜித் அறிவுரையின் பேரில் உருவாக்கியுள்ளனர். இதனைக் கொண்டு அரை மணி நேரத்தில் ஒரு ஏக்கர் அளவு பரப்பளவில் கிருமி நாசினிகளை தெளித்து விடலாம். இதன் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்று வெற்றி அடைந்துள்ளது.
இதனை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை #AjithLedDroneToFightCorona என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

கடந்த 2019ம் ஆண்டு ‘தக்‌ஷா’ என்னும் மாணவர்களின் ஆராய்ச்சி குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்தக் குழு பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து, சாதனைகளைப் படைத்தது. பெங்களூருவில் நடந்த ட்ரோன் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொண்டு பரிசுகள் வென்றன.