கொல்லிமலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – 8 பேர் படுகாயம்!

 

கொல்லிமலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – 8 பேர் படுகாயம்!

நாமக்கல்

கொல்லிமலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில், தஞ்சையை சேர்ந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர், நேற்று சுற்றுலா வேனில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்திருந்தனர். வேனை மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார். கொல்லிமலையில் பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர்கள், பின்னர் முள்ளுக்குறிச்சி மாற்றுப் பாதையில் கீழே இறங்கி கொண்டிருந்தனர்.

கொல்லிமலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – 8 பேர் படுகாயம்!

நரியங்காடு என்ற இடத்தின் அருகே வந்தபோது திடீரென வேனின் பிரேக் பழுதாகியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த வேன் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து வந்த செங்கரை காவல் நிலைய போலீசார், பொக்லைன் இயந்திரம் மூலம் வேனை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.