நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்வு : ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் இரண்டு உடல்கள் மீட்பு!

நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்வு : ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் இரண்டு உடல்கள் மீட்பு!

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் சுமார் 80 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இவர்கள் மண்ணில் புதையுண்டு இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்வு : ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் இரண்டு உடல்கள் மீட்பு!

இதையடுத்து 10 வது நாளாக மீட்புபணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர், மோப்ப நாய் உதவியுடன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்வு : ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் இரண்டு உடல்கள் மீட்பு!

இந்நிலையில் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி  ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.