கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு!

 

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு!

கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியில் கடந்த வாரம் நள்ளிரவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட அந்த நிலச்சரிவில் 80 பேர் மாயமானதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகின, தமிழகத்தின் கயத்தாறு பகுதியில் இருந்து வேலைக்காக சென்று மூணாறில் வசித்து வந்த அந்த 80 பேரும், மண்ணில் புதையுண்டு இருக்கலாம் என கூறப்பட்டது. இச்சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போரடிக் கொண்டிருந்த 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு!

அதனைத்தொடர்ந்து மாற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த 6 நாட்களுக்கு மேலாக அங்கு மீட்புப்பணி தொடர்ந்து வருகிறது. முதலில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து வேறு யாருமே உயிருடன் மீட்கப்படவில்லை. இந்த நிலையில் இதுவரை நிலச்சரிவில் இருந்து 56 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.