மாஞ்சா நூல் மூலம் காத்தாடி பறக்கவிட்டதாக 4 பேர் கைது!

 

மாஞ்சா நூல் மூலம் காத்தாடி பறக்கவிட்டதாக 4 பேர் கைது!

கொரோனா காலகட்டத்தில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவது அதிகரித்துள்ளது. ஊரடங்கு வீட்டுக்குள் முடங்கி உள்ள இளைஞர்கள் பலர் வீட்டு மொட்டை மாடிகளில், தெருக்களில் நின்றவாறு பட்டம் விட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் மாஞ்சா நூலால் பல விபத்துக்கள் நடந்து வருகிறது. மாஞ்சா நூலில் பட்டம் விடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரித்தும் இந்த நிகழ்வானது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

மாஞ்சா நூல் மூலம் காத்தாடி பறக்கவிட்டதாக 4 பேர் கைது!

சமீபத்தில் மூலக்கடை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த மாதவன் என்று 33 வயதான இளைஞர் ஒருவர் மாஞ்சா நூல் கழுத்தறுத்ததால் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணடைந்துள்ளார். குறிப்பாக வட சென்னை பகுதியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விடுவது வாடிக்கையாகியுள்ளது.

மாஞ்சா நூல் மூலம் காத்தாடி பறக்கவிட்டதாக 4 பேர் கைது!

இந்நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் மாஞ்சா நூல் மூலம் காத்தாடி பறக்கவிட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வடசென்னையின் முக்கிய பகுதிகளான மூலக்கடை, காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூா், எண்ணூா், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மாஞ்சா நூல் வைத்திருந்த 55 பேர் கைது செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.