தொடரும் உயிரிழப்புகள்! மாஞ்சா நூலுக்கு நிரந்தர தடை வருமா?

 

தொடரும் உயிரிழப்புகள்! மாஞ்சா நூலுக்கு நிரந்தர தடை வருமா?

மாஞ்சா நூலால் கழுத்தறுபட்டு உயிரிழப்பு ஏற்படும்போதெல்லாம் போலீசார் அதிரடியாக செயல்பட்டு மாஞ்சா நூல் விற்போரை கைது செய்கின்றனர். ஆனாலும், ஆன்லைன் வழியாகவும் மாஞ்சா நூல் விற்பனை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மூலக்கடை மேம்பாலத்தில் இளைஞர் மாதவனின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்துள்ள நிலையில் மீண்டும் நடவடிக்கை எடுத்திருக்கிறது போலீஸ்.

அலுவல் நிமித்தமாக கோயம்பேட்டில் பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் மாஞ்சா நூலா கழுத்தறுபட்டு உயிரிழந்தார். மிண்ட் பகுதியில் விடுமுறை தினத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்புகையில் பைக்கின் முன்னால் அமர்ந்திருந்த குழந்தயின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததில் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி மாஞ்சா நூலுக்கு உயிரிழப்புகள் அதிகதிரித்துக்கொண்டே செல்கின்றனர்.

இதனால், மாஞ்சா நூல் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தாலும் மாஞ்சால் நூல் விற்பனை தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. நேரடியாக விற்பனை செய்வதில் சிக்கல் இருப்பதால், ஆன்லைன் வழியாக எளிதாக விற்பனை ஆகிவருகிறது மாஞ்சா நூல். இதனால் இப்போது இன்னொரு உயிர் போராடிக்கொண்டிருக்கிறது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த மாதவன் என்பவர், மாதவரம் அடுத்த மூலக்கடை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காற்றாடி மாஞ்சா நூல் அறுந்து விழுந்ததில் கழுத்து அறுபட்டு, ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அனுமதித்தக்கட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 4 இடங்களில் மாஞ்சா நூலால் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

மூலக்கடையில் மாஞ்சா நூலில் சிக்கி கழுத்து அறுபட்ட சம்பவம் குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 36 மாஞ்சா நூல் கண்டு. 164 பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதவரம், மணலி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் காற்றாடி மாஞ்சா நூல் புழக்கத்தில் இருப்பதை காவல்துறையினர் உரிய முறையில் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாததால் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது வேதனைக்கு உரியதாக உள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழப்புகளின் போது மட்டும் நடவடிக்கையை தீவிரப்படுத்தாமல், நிரந்தரமாக மாஞ்சா நூலை தடை செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.