ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,426 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,114  ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 97,575 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது.

ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

இந்நிலையில் தலைமை செயலகத்தில் இன்று பொது முடக்கத்தை நீட்டிப்பதா இல்லையா? என்பது குறித்து காலை 10 மணிக்கு மருத்துவ வல்லுநர் குழு உடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்நடத்திய முதல்வர் இன்று மருத்துவ குழுவின் முடிவை கேட்டறிகிறார். நாடு முழுவதும் ஆகஸ்ட் 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கபட்ட நிலையில் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.