காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 306 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 8017 ஆக உயர்வு!

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 306 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 8017 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 306 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 8017 ஆக உயர்வு!

ஊரடங்கு இன்னும் 2 நாட்களில் நிறைவடைய உள்ளதால், ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் மேலும் 306 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 8017 ஆக அதிகரித்துள்ளது.