15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!

 

15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுரை, விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டும் பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!

இந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.