அந்த பாடலுக்கு ஆடிய மணமகள் : அதனால் விவாகரத்து செய்த மணமகன்

 
d

 திருமண வரவேற்பு நிகழ்வுகள் திருமணம் முடிந்ததும் நடைபெறும் நிகழ்வுகளில் மணமகன்,  மணமகள்  மற்றும் குடும்பத்தினர் ஆடிப் பாடுவது வழக்கமாகிவிட்டது.  அப்படி திருமணத்தன்று மணமகள் அந்த பாடலுக்கு ஆடியது மணமகனுக்கும் மணமகன் குடும்பத்தினருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  இதனால் மணமகளை  திருமணத்தன்று விவாகரத்து செய்த   அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.  ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

 பாக்தாத்தில் நடந்த அந்தத் திருமணத்தில் மெசைதரா என்கிற பாடலுக்கு மணமகள் நடனம் ஆடியிருக்கிறார்.   அதை பார்த்து மணமகனும் மணமகன் குடும்பத்தினரும் கொதித்தெழுந்து இருக்கிறார்கள்.  

w

 நான் ஆதிக்கம் செலுத்துவேன்.   என்னுடைய கண்டிப்பான அறிவுறுத்தலின்படி நீ ஆளப்படுவாய்.   என்னுடன் நீ இருக்கும் நாள் வரையிலும் என்னுடைய கட்டளைகளின்படி நடப்பாய்.   நான் திமிரானவள் என்று அந்தப் பாடலுக்கு அர்த்தம் .  அதனால்தான் மணமகனையும் அவரது குடும்பத்தினரையும் இந்த அளவுக்கு கொதிக்க வைத்திருக்கிறது.  

 இதனால் மணமகனும் மணமகனின் குடும்பத்தாரும் பெண் வீட்டாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.   கடைசியில் திருமணத்தன்று மணப்பெண்ணை விவாரத்து  செய்திருக்கிறார்.  

 இந்தப் பாடலால் விவாகரத்து ஆனது இது முதல் முறையல்ல.   இதற்கு முன்னரே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.  கடந்த 2001-ஆம் ஆண்டில் ஜோர்டானில் மணப்பெண் ஒருவர் மணமகன் தன்னுடைய கைகளில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.   அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.   அவர் கூடவே மெசைதரா பாடலையும் .   இணைத்திருந்தார் இதனால் ஆத்திரமான மணமகன் உடனே விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.