கால்களை விரிக்காதீங்க..மாணவிகளிடையே அமைச்சரின் சர்ச்சை பேச்சு

 
li

கால்களை விரிக்காதீர்கள் புத்தகங்களை விரியுங்கள் என்று மாணவிகளிடையே  பேசிய பெண் அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.  

தென்னாப்பிரிக்காவில் லிம்போபோ மாகாணத்தின் பெண் சுகாதாரத்துறை அமைச்சர் போபி ரமதுபா பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது,   பெண் குழந்தைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது இது ஒன்றுதான்.   உங்கள் புத்தகத்தை விரியுங்கள் உங்கள் கால்களை மூடுங்கள்.    உங்கள் கால்களை விரிக்காதீர்கள் புத்தகத்தை விரியுங்கள் என்று பேசினார்.   அவர் மேலும்,    பெண்கள் வயதான ஆண்களால் விலை உயர்ந்த விக்குகள்,  ஸ்மார்ட்போன்கள் போன்ற பொருட்களால் ஆசை கட்டி கவரப்படுகிறார்கள் என்று தெரிவித்தார் .

lim

அமைச்சரின் இந்த பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.    பல்வேறு தரப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள் .

அமைச்சரின் இந்த கருத்து பிரச்சனைக்கு உரியது என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிவிவே குவாருபே இவ்வாறு தெரிவித்திருக்கிறார் . அவர்,   பள்ளி மாணவர்களிடம் பாலுறவுக்கு முன் அனுமதி பெறுவது குறித்து அர்த்தமுள்ள ஒரு விவாதத்தை மேற்கொண்டிருக்கலாம் .  ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்கின்றீர்கள்.   பெண்கள் மீது தேவையற்ற அழுத்தத்தினை கொடுக்கின்றார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

 இதை அடுத்து தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும்,   தான் ஆண்களையும் குறிப்பிட்டுத்தான் கருத்தை சொன்னேன் என்றும்  அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார்.   மேலும்,   பெண்களோடு பாலுறவு கொள்ள வேண்டாம் கல்வியில் கவனம் செலுத்துங்கள் என்று ஆண்களுக்கும் தான் சொன்னேன் என்று தெரிவித்திருக்கும் அமைச்சர்  போபி ரமதுபா,    தன் தொகுதியான லிம்போபோ  வாக்காளர்கள் தான் சொன்ன கருத்துக்கு  பாராட்டு தெரிவித்து இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 தென்னாப்பிரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 33 ஆயிரத்து 400 பெண்கள் 17 வயதிற்குள் குழந்தையை பெற்றெடுத்து இருப்பதாக அரசு புள்ளிவிவரம் தெரிவித்திருக்கிறது .   இந்த  புள்ளி விபரம்தான் அமைச்சரின் அந்தப் பேச்சும் சர்ச்சையும் எழ காரணமாக அமைந்திருக்கிறது.