இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்; இஸ்ரோ பெண் ஊழியர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்; இஸ்ரோ பெண் ஊழியர் பலி!

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த லாரி மோதியதில், இஸ்ரோ பெண் ஊழியர் உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் வீரசிகாமணி அடுத்த நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சித்ரவேல். இவரது மகள் முத்துமாரி( 27). இவர் குமரி மாவட்டம் காவல்கிணற்றில் செயல்பட்டு வரும் இஸ்ரோ மையத்தில் ஓப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதனையொட்டி, நாகர்கோவிலில் தங்கியிருந்து, இருக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்தார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்; இஸ்ரோ பெண் ஊழியர் பலி!

இந்த நிலையில், முத்துமாரி இன்று காலை, வெள்ளமடத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது, எதிர்பாராத இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.

இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி முத்துமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேஸ்வரி அதிர்ஷடவசமாக காயமின்றி உயிர் தப்பினார். தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார், உடலை மீட்டு குமரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறிதது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.