“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” இன்று முதல் அனல் பறக்கும் பிரச்சாரம்!

 

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” இன்று முதல் அனல் பறக்கும் பிரச்சாரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவர் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” இன்று முதல் அனல் பறக்கும் பிரச்சாரம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக முதல்வர் பழனிசாமி களமிறங்கி, பரப்புரை செய்து வரும் நிலையில் திமுகவில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி வந்தார். அதிமுக ஆட்சியில் ஊழல், மக்கள் குறைகள் தீர்க்கப்படவில்லை என கூறி வரும் ஸ்டாலின் இன்று முதல்வர் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” இன்று முதல் அனல் பறக்கும் பிரச்சாரம்!

இந்நிலையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்றுமுதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரை திட்டத்தை இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்குகிறார். 100நாளில் பிரச்னைக்கு தீர்வு என்ற அடிப்படையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார் ஸ்டாலின். இன்று திருவண்ணாமலை, நாளை வேலூர், ஜனவரி 31இல் திருவள்ளூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.