நீ ஏன் பிராமணர் போல ஒரு வழக்கறிஞரை காட்டி கிண்டலடிக்கிறாய் - கிருஷ்ணசாமி ஆவேசம்

 
kri

ஜெய்பீம் படத்தில் உண்மையான கதாநாயகன் யார்? அவர் பெயரை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று ஆவேசப்பட்டுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.

 ஜெய்பீம் என்கிற தலைப்பை தணிக்கைக்குழு எப்படி அனுமதித்தது? இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்திருக்கிறார்.

ஜெய் பீம் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டிய ஒரு படம்.    தேவையற்ற காட்சிகளை புகுத்தி சாதி, மத, மொழி, இன ரீதியான மோதல்களைத் தூண்டி விட முயன்று வருகிறது என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.


 அத்திரைப்படத்தில் வில்லனின் பின்னணியில் மற்றொரு சமுதாயத்தின் அடையாளமாக வைக்கப்பட்டுள்ள அக்னி கலசம்  காட்சிப்படுத்தப்பட்டது தவறு.   உண்மை சம்பவத்தில் வரும் கிறிஸ்தவரான ஆரோக்கியசாமி பாத்திரத்திற்கு இன்னொரு மதத்தைச் சேர்ந்த பெயரான குருமூர்த்தி பெயர் வைக்கப்படுகிறது.  உண்மை சம்பவம் என்றால் உண்மையான பெயரைத்தானே  வைக்க வேண்டும்?என்று கேட்கிறார்.

 இருளர் இன மக்களை படத்தில் காட்டும்போது  நீ ஏன்  பிராமணர் போல ஒரு வழக்கறிஞரை காட்டி அவர் சிவசிவ என்று சொல்வது போல வைத்து,   கிண்டல் கேலி செய்கிறாய்.  இதனால் இனப்பிரச்சினை தூண்டி விடப்படுகிறது.   ஆகையால்  ஜெய்பீம்  படத்தை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர்,

 ஜெய்பீம் என்கிற  தலைப்புக்கும் படத்திற்கும் சம்மந்தமில்லை.   ஜெய்பீம் என்கிற தலைப்பை தணிக்கை குழு எப்படி அனுமதித்து என்றே தெரியவில்லை என்கிறார்.

 ராஜாக்கண்ணு விவகாரத்தில் வழக்கறிஞர் சந்துரு என்பவர் ஒரு பார்ட் தான்.  மெயின் யாரோ அவர்களை முன்னிலைப் படுத்தி இருக்கலாம் .  அந்த பிரச்சனையில் உண்மையில் போராடியது யார்? அவர் பெயரைத்தானே வைத்திருக்கணும்.  படத்தில் உண்மையான கதாநாயகன் யார்? செங்கனிதானே முக்கிய கேரக்டர்.  அந்த பெயரைத்தானே வைத்திருக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.