இரு மாநில மக்களிடையே பதற்றம் ஏற்படுத்திய நாம் தமிழர் நிர்வாகி

 
வா

தமிழ்நாடு - கர்நாடகா இடையே மோதல் ஏற்படும் வகையில் ஐயப்ப பக்தர்களை மிரட்டிய நாம் தமிழர் கட்சி  நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 கர்நாடகாவில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் வழியாக ஐயப்ப பக்தர்கள் நேற்று முன் தினம் ஒரு வேனில் சபரிமலைக்கு சென்று இருக்கிறார்கள். அந்த வேனில் கன்னட அமைப்பு பிரமுகரான வாட்டாள் நாகராஜ் கொடி கட்டப்பட்டு இருந்திருக்கிறது.  

vn

 இதைக் கண்ட தேனி மாவட்டம் பெரியகுளம் நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் புஷ்பராஜ்,  அந்த வாகனத்தை மறித்து கட்சிக்கொடி கட்டக்கூடாது. சபரிமலை சென்றுவிட்டு  மீண்டும் வரும்போது இந்த கொடியை கட்டியிருக்கக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்.  

 இதை அடுத்து வேனில் பயணம் செய்தவர்கள் கொடியை அகற்றினர்.  இந்த நிகழ்வை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த புஷ்பராஜ் சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார்.

இதனால் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டிருக்கும் நிலையில்,  இரு மாநில மக்களிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் செயல்பட்ட புஷ்பராஜ் மீது தென்கரை விஏஓ கணேசன் போலீசில் புகார் செய்துள்ளார்.    இதையடுத்து போலீசார் புஷ்பராஜ் கைது செய்து சென்றனர்.