விஜய்,சூர்யா,விஜய்சேதுபதி.. கொதித்தெழும் அர்ஜூன் சம்பத்

 
vra

 விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு ஒரு உதைக்கு ஆயிரத்தி ஒரு ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்,   சூர்யாவை உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று பாமக தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பால் பரபரப்பு எழுந்திருக்கும் நிலையில் அது குறித்து பேசியிருக்கிறார்.

vv

 விஜய் சேதுபதியை உதைத்தால் சன்மானம் என்று அறிவித்ததற்காக  கோவை காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இது குறித்து பேசிய அர்ஜுன் சம்பத்,   முத்துராமலிங்க தேவரை விமர்சித்ததற்கு எதிர்வினையாக அத்தகைய பதிவு எங்கள் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.  மற்றபடி வழக்கை சந்திப்பதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை.  விஜய் சேதுபதி போன்றோர் மத்திய அரசு வழங்கும் விருதுகளை பெற்றுக் கொண்டு இந்தியா குறித்தும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்தும் தவறாக பேசி வருகின்றார்கள்.  சுதந்திரத்தை அளவாக வைத்துக் கொள்ள வேண்டும் .  va

நடிகர் விஜய் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்ப்பேன் என்று வசனம் பேசிவிட்டு வரி கட்டாமல் ஏமாற்றுகிறார்.  அதுபோலத்தான் சூர்யா ஜெய்பீம் படத்தை ஓடிடியில் வெளியிட்டு 70 கோடி ரூபாய் சம்பாதித்து விட்டு அந்த உண்மை சம்பவத்திற்கு காரணமான ராஜாக்கண்ணு மனைவிக்கு வெறும் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு,  தொழிலாளர் நலன் மனித உரிமை குறித்து பேசி இரட்டை வேடம் போடுகிறார்.   இல்லாத இருளர் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிட்டு முதலமைச்சருடன் நின்று விளம்பரம் தேடுகிறார் சூர்யா என்று கொந்தளித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர்  வ.உ.சியின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மத்திய சிறையிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது  அவர் இவ்வாறு கொந்தளித்துள்ளார்.