கோவை நகரத்தை பரபரப்புக்குள்ளாக்கிய விஜய் ரசிகர்கள்

 
v

விஜய்க்கும் அந்த நாற்காலி கனவுகள் அதிகம் இருக்கிறது.  அதனால் தான் திரைப்படங்களில் மட்டுமல்லாது திரைக்கு வெளியேயும் அவர் அரசியல் பேசி வருகிறார் என்பதை  அவரது ரசிகர்களும் உணர்ந்து இருக்கிறார்கள். 

 இதனால் தான் விஜய்யின் ஒவ்வொரு பிறந்த தினத்தின் போதும் பட ரிலீஸின்போது மற்றும் பண்டிகை தினத்தின் போதும் போஸ்டர்கள் ,பேனர்கள் மூலம் அடுத்த ஆட்சி நமது தான் தலைவா,  உமது ஆட்சி,  நமது ஆட்சி என்கிற ரீதியில் அவர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

vv

 விஜய்யும் தனது மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதித்தார் அவர்களும் பெரிய கட்சிகளுக்கு கிளையாக 160 தொகுதிகளில் போட்டியிட்ட 129 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.

 இந்த நிலையில்தான் 2022ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புவியில் உமது ஆட்சி நடக்கும் தலைவா வழி நடத்தும் நேரம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள்.