முதல்வர் ஸ்டாலினுக்கு வைரமுத்து வைத்த கோரிக்கை

 
v

கவிஞர் வைரமுத்து வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். 

 சென்னை கோட்டூர்புரத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் அயலகத் தமிழர் நாள் விழா கொண்டாடப்பட்டது.  கவிஞர் வைரமுத்து இந்த விழாவில் பங்கேற்றார் .    இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,    உலகத் தமிழர்களை இணையவழியில் இணைத்து ஒரு மாநாட்டை நடத்தியதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.  அதே நேரம்,   உலக தமிழர்களுக்கு என ஒரு தலைமை வங்கி தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

s

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்,

தமிழக அரசின்
அயலகத் தமிழர் நாள் விழாவில்
கவியரங்கத் தலைமை ஏற்றபோது
நினைவுப் பரிசு வழங்கினார்
அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

உடன்
திருமதி ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப
முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப
ஆரூர் புதியவன்
 என்று குறிப்பிட்டிருக்கிறார்.