சூர்யாவுக்கு மத்திய அமைச்சர் ஆதரவு - ஜெய்பீம் விவகாரத்தில் பரபரப்பு

 
ர்ர்


சூர்யா நடித்த ஜெய் பீம் படம் குறித்து மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

 வேலூரில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு உதவி எண் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு உதவி என்னை தொடங்கி வைத்தார் ராம்தாஸ் அத்வாலே.  அதன் பின்னர் வேலூர் சிப்பாய் புரட்சி இறைவனுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் அவர் இந்திய குடியரசு கட்சி மாநாட்டில் பங்கேற்று பேசினார்.

ர்ர்

 ஜெய்பீம் படத்தில் வில்லன் வீட்டில் வன்னியர் சமூகத்தின் சின்னத்தை வைத்திருந்ததும் அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு மறைந்த வன்னியர் சங்கத் தலைவரின் பெயரை வைத்து இருந்ததற்கும் கடுமையாக எதிர்ப்பு எழுந்து இருக்கிறது.   இதனால் ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது . 

சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாமகவினர் மாவட்டம்தோறும் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.   நாளுக்கு நாள் சூர்யாவுக்கும் ஜெய்பீம் படத்திற்கும் இப்படி நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஜெய்பீம் குழுவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

 வேலூர் மாவட்டத்தில் மாங்காய் மண்டி அருகில் இந்திய குடியரசு கட்சி  மாநில தலைவர் சூசை தலைமையில் சமநீதி மாநாடு நடைபெற்றது .  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டு அம்பேத்கர் படத்தை திறந்து வைத்து மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

க்க்

 அவர் பேசியபோது,  தமிழில் வெளியாகி இருக்கும் ஜெய்பீம் திரைப்படம் நல்ல திரைப்படம்.  அந்த குழுவினருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் .  இதனை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டாலும் அதனை வரவேற்போம்.   திரைப்படத்தின் நடிகர், இயக்குனர் ஆகியோருக்கு இந்திய குடியரசு கட்சி பாதுகாப்பு இருக்கும் என்று அவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

 சூர்யாவுக்கு எதிராக பாமக வினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் வழக்கு என்று நெருக்கடி கொடுத்து வரும் நிலையில்  சூர்யாவிற்கு  ஆதரவாக இருப்போம் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.