எடப்பாடியை குற்றவாளி வளையத்துக்குள் கொண்டுவர முகாந்திரம்.. விசாரணைக்கு அழைக்க சம்மன்..

 
e

 அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் விவகாரம் ஒரு பக்கம் சூடு கிளப்பிக் கொண்டிருக்க, அதே நேரம் கொடநாடு விசாரணையும் சூடு பிடித்திருக்கிறது.  அதிமுகவின் அதிகாரத்தை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி இங்கே தீவிரம் காட்டி வரும் நிலையில்,  அங்கே கொநாடு கொலை, கொள்ளை வழக்கில் அவரை குற்றவாளி வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான முகாந்திரங்கள் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.  இதையடுத்து அவருக்கு விரைவில் நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட இருக்கிறது என்றும் தகவல்.

எ

மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஐபிஎஸ்,  கோவை மாவட்டத்திலுள்ள போலீஸ் அகாடமியில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும்,  மூன்று நாட்களில் 22 மணிநேரம் அவர் தீவிர விசாரணை நடத்தி இருக்கிறார் என்றும்,  இதனால் கொடநாடு வழக்கில் அதிதீவிரம் காட்டப்படுகிறது  என்றும் தகவல்.

 கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எஸ்டேட்டின் மேலாளர் நடராஜன்,  ஊழியர்கள், கொடநாடு கணினிப் பிரிவு ஆப்பரேட்டர் தினேஷின் சகோதரி, அவரது உறவினர்கள் , கனகராஜின் உறவினர்கள் என்று பலரிடம் விசாரணை நடத்திய நிலையில் சென்னையில் இருந்து வந்த ஒரு முக்கிய அதிகாரியிடமும் விசாரணை விசாரணை நடந்து இருக்கிறது.

 தொடர்ந்து முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவரான சேலம் இளங்கோவன் குற்றவாளி வளையத்திற்குள் கொண்டுவரப்படுகிறார் என்றும்,  சேலம் இளங்கோவனை அடிப்படையாக வைத்து அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமியையும் குற்றவாளி வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான போதுமான முகாந்திரங்கள் உள்ளன என்றும்,  கொடநாடு வழக்கு விசாரிக்கும் அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

அநேகமாக ஜனவரி மாதம் எடப்பாடி பழனிச்சாமியை விசாரணைக்கு அழைக்க சம்மன் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்.