’’இப்படிப்பட்ட நபரைத்தான் நீங்கள் கதாநாயகனாக கொண்டாடுகிறீர்கள்’’

 
ss

 வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குருவின் பெயரை ஜெய்பீம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்டிப்பதற்கும்,  வன்னியர் சங்கத்தின் முத்திரையான அக்னி கலசம் காலண்டர் வில்லனுக்கு பின்னால் மாட்டப்பட்டிருந்ததையும்  கண்டு கொதித்தெழுந்த பாமகவினர் தொடர்ந்து சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அவர் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று தொடர்ந்து எச்சரித்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

g

 இதுகுறித்து சூர்யாவிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்,  ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருக்கிறார்.   அவர் இந்த விவகாரத்தில் பாமகவை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

 வன்னியர்கள் மனசு புண்பட்டு விட்டதாக சொல்லுகிறார்களே... ராமதாசும் பாமகவும் தான் ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தின் பிரதிநிதியா?  இந்த படத்தில் பத்து நொடிகளுக்கு ஒரு காலண்டர் வைத்து விட்டதால் வன்னியர் சமூகம் காயப்பட்டு விட்டது என்று சொல்கிறீர்களே இது அபத்தமாக இல்லையா?   சூர்யா 5 கோடி இழப்பீடு கொடுத்தால் அதை பார்வதி அம்மாவுக்கு கொடுப்போம் என்கிறீர்களே?   பல ஆண்டுகளாக பார்வதியம்மாள் அதே இடத்தில் தானே இருக்கிறார் அவருக்கு இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள்?

 இவ்வளவு ஏன்,   ஏழை-எளிய வன்னிய மக்களுக்கு பாமக என்ன செய்தது ?என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.   அவர் மேலும்,    அந்தோணிசாமி பாத்திரத்திற்கு ஏன் குரு பெயர் வைத்தீர்கள் என்று கேட்கிறீர்கள்.   அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என பெயர் வைத்தால் என்ன தவறு? வில்லன் பாத்திரத்திற்கு ஜெ.குரு என்றே பெயர் வைத்திருக்கலாம். 

ss

காலம்சென்ற குரு இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக அந்தமான் சிறையில் இருந்தவரா?  இல்லை மொழி போருக்காக உண்ணாவிரதமிருந்து சொத்துக்களை இழந்தாரா?   வருடா வருடம் சித்திரை திருவிழாவில் குரு என்னவெல்லாம் பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும்.   மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி ஒரு லட்சம் பேர் கூடியிருந்த மாநாட்டில் சொல்லவே வாய் கூசும் அளவிற்கு பேசினாரே குரு,   ஒரு மாவட்ட ஆட்சியரை உள்ளே காலடி எடுத்து வைத்தால் வெட்டுவேன் குத்துவேன் என்று பேசியவர் தானே குரு.    அவரின் வன்முறை பேச்சுக்கு அதிக உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.

 இப்படிப்பட்ட நபரைத்தான் நீங்கள் கதாநாயகனாக கொண்டாடுகிறீர்கள்.   அக்னி கலசத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்தால் என்ன தவறு இருக்கிறது? ஜெ. குரு என்று பெயர் வைத்தாலும் அதில் ஒன்றும் தவறு இல்லை .  அந்தத் திரைப்படத்தில் இருந்து அக்கினிச் சட்டியை எடுத்தது தவறு என்றுதான் சூர்யாவுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்கிறார்  அதிரடியாக.