முதல்வரின் திடீர் அறிவிப்பால் எழுத்தாளர்கள் அதிர்ச்சி

 
st

நாற்பத்தி அஞ்சாவது புத்தகாட்சி சென்னையில் வரும் 6ஆம் தேதி தொடங்க இருந்தது.  முதல்வர் மு. க. ஸ்டாலின்.  இந்த புத்தக காட்சியை தொடங்கி வைக்க இருந்தார்.     நந்தனம்  புத்தக காட்சிக்கான அரங்கு தயாராகியிருக்கிறது.  800 புத்தக கடைகள் இந்த காட்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது.

t

புத்தக காட்சிகளின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் ,விற்பனையாளர்களும்   புத்தக கண்காட்சியை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.

 இந்த நிலையில் அவர்களெல்லாம் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் அளவுக்கு அரசின் திடீர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது இருப்பதால் புத்தகக்காட்சி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.  இது வாசிப்பாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

book

ஆனாலும் நோய் பரவல் கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பாக புத்தக காட்சியை நடத்தலாம் என்று சொல்லி புத்தக்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.