சிறுமியை கிண்டல் செய்த முதியவர் -ரத்த வெள்ளத்தில் சாய்த்த தந்தை

 
su

என் வீட்டு சமையல்காரன் என் மகளையே கிண்டல் செய்வதா என்று ஆத்திரத்தில் முதியவரை அடித்துக் கொன்று இருக்கிறார் முதலாளி.   மராட்டிய மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 மும்பையில் சப்அர்பன் முல்தண்ட் பகுதியை சேர்ந்தவர் சலீம் ஜாபர். 32 வயதான இவருக்கு ஒரு மகள் உள்ளார்.  சலீமின் வீட்டில் 69 வயதான அப்துல் என்பவர் சமையல்காரராக பணிபுரிந்து வந்திருக்கிறார். 

 அப்துல் சமையல் வேலை செய்யும் போதெல்லாம் முதலாளிகளின் மகள் சிறுமியை அடிக்கடி கிண்டல் செய்து வந்திருக்கிறார் .  மகளைச் அப்துல்  கிண்டல் செய்வது சலீமுக்கு தெரியவந்திருக்கிறது.

b

 நேற்றும் அப்படித்தான் சமையல் வேலை செய்து கொண்டிருந்தபோது வழக்கம்போல் அந்த சிறுமியை கிண்டல் செய்திருக்கிறார்.  இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சலீம்,   என் வீட்டு வேலைக்காரன் என் மகளையே கிண்டல் செய்வதா என்று ஆத்திரத்தில் பயங்கர ஆயுதத்தை எடுத்து கொடூரமாக அடித்து உள்ளார்.   இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்து துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் அப்துல்.

பின்னர் சலீமின் உடலை வீட்டிற்கு அருகே உள்ள மின் கம்பம் அருகே தூக்கி வீசி இருக்கிறார்.  சாலையோரம் ரத்த காயங்களுடன் ஒரு முதியவர் கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.

 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது சலீமின் வீட்டில் சமையல்காரர் அப்துல் என்பது தெரியவந்திருக்கிறது.   இதையடுத்து நடந்த விசாரணையில் தனது மகளை அடிக்கடி கிண்டல் செய்து வந்ததால் அடித்துக் கொன்றதாக குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார் சலீம்.