பிரசவ அறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் தாய்-சேய் உயிர் தப்பினர்

 
n

 பிரசவ அறையில் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் தாய்-சேய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.  இரண்டு பெண்கள் மட்டும் படுகாயமடைந்துள்ளனர்.   பெரம்பலூர் மாவட்டம் நல்லூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில்   இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில்  வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்.   இவரது மனைவி ரேவதி(20).  இவருக்கு நேற்று காலை 7 மணி அளவில் பிரசவவலி ஏற்பட்டு இருக்கிறது.   இதை அடுத்து நல்லூர் வட்டார அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.    காலை ஒன்பது முப்பது மணி அளவில் ரேவதிக்கு பிரசவ அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 

nn

 முருகனின் சித்தி எழில்ராணி,  செவிலியர்கள் மகேஸ்வரி , ஸ்ரீவதனி,  மருத்துவ உதவியாளர் செல்வி உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர் .  காலை பத்து முப்பது மணி அளவில் ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.   அப்போது பிரசவ அறையின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்திருக்கிறது. 

இந்த சம்பவத்தில் ரேவதியின் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பி இருக்கிறார்கள்.   செவிலியர்கள் மகேஸ்வரி,  ஸ்ரீவதனி ஆகியோரும் காயமின்றி தப்பியுள்ளனர்.   ரேவதியின் உறவினர் எழில்ராணி, மருத்துவ உதவியாளர் செல்வி இரண்டு பேரும் படுகாயமடைந்தனர்.   இதையடுத்து அவர்களுக்கு நல்லூர் வட்டார அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 பிரசவம் பிரசவம் நடந்த அடுத்த நிமிடமே மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவமும் அதில் தாய் சேய் தப்பிய  தகவல் வெளியாகி நல்லூர் மற்றும் வேப்பூர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.