’’உதயசூரியனுக்குத்தான் குத்துனோம்...’’-குமுறும் பாட்டிக்கு பாஜக சொன்ன ஆறுதல்

 
patti

கடந்த அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பையுடன் 2 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது.

அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  ஆனால்  திமுக ஆட்சிக்கு வந்ததும் வரும் இந்த முதல் பொங்கலில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்ப்பில் இருக்க,  ஆயிரம் ரூபாய் கூட அரசு வழங்கவில்லை.  இதனால் மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்ற பேச்சு இருக்கிறது.

bag

இந்த நிலையில்,  பொங்கல் பையை வாங்கிவிட்டு, பணம் ஏதும் கொடுக்க வில்லை என்பதால் உதயசூரியனுக்கு ஓட்டு போட்டதை நினைத்து ஆத்திரத்தில் திட்டுகிறார் ஒரு பெண்மணி.

’’அவனுகத்தான் சொன்னானுங்க.. 5 ஆயிரத்த தர்றோன்னு சொன்னாங்க... நாங்க போட்டுட்டோம்.  இப்ப என்னடான்னா காசு கொடுக்காம வெறும் அரிசியையும் ம....ம் கொடுக்குறானுவ... இத வச்சி நாங்க என்னத்த பொங்கல் கொண்டாட.  வருவானுங்க வரட்டும்.  அங்க போன்னு அலையவிட்டானுங்க ஐந்து பசா தேறல. இவனுகளுக்கு நாங்க ஓட்டு போடணும்.  வந்தானுங்கன்னா செருப்புலயே.. ஓட்டு கிடையாது இனிமே அவனுங்களுக்கு’’ என்று குமுற,  யாருக்கு ஓட்டு போட்டீங்க என்று ஒருவர் கேட்க, ’’ உதயசூரியனுக்குத்தான் குத்துனோம்’’என்று அந்த பெண்மணி தனது ஆத்திரத்தை கொட்டியிருக்கிறார்.  இந்த வீடியோ வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை தனது டுடிவிட்டர் பக்கத்தில்  ஷேர் செய்திருக்கும் தமிழக பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்,
’’ரொம்ப லேட் பாட்டி
உங்கள் ஓட்டு
இன்னும் 4 1/2
 வருடத்திற்கு
செல்லும்.

அதுவரை
திட்டிக்கொண்டே
இருக்க வேண்டியதுதான்.

ஆனால் உங்களை
போன்ற பல லட்சம்
பேரின் வயிற்றெரிச்சல்
இவர்களை சும்மா விடாது’’ என்கிறார்.