சங்கரய்யாவை கவனித்துக்கொள்ள தனி மருத்துவ குழுவை அமைத்த முதல்வர்

 
ss

நூறு வயதை கடந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   சங்கரய்யாவுக்கு ஆக்சிஜன் லெவல் மற்ற அனைத்தும் வழக்கம் போல் உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவமனை டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளனர்.   தொடர்ந்து அவர் மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமானவர் என். சங்கரய்யா.  தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராக விளங்கும் இவரை பாராட்டி கடந்த ஆண்டு தமிழக அரசு தகைசால் தமிழர் விருதும் பத்து லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்கியது .  அந்த பத்து லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிவிட்டார் சங்கரய்யா.

sy

 100 வயதை கடந்த சங்கரய்யா சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.   கடந்த இரண்டு தினங்களாக சங்கரய்யாவுக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.   பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இதையடுத்து உடனடியாக அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

 அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதில் ஆக்ஸிஜன் இல்லாமல் மற்ற அனைத்தும் அவருக்கு வழக்கம் போல் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

 சங்கரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின்,   தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகைசால் தமிழர் தோழர் சங்கரய்யா அவர்கள் விரைவில் முழு நலம் பெற்று திரும்பிய விழைகிறேன்.   தோழர் அவர்களை கவனித்துக் கொள்ள தனி மருத்துவ குழுவை ஏற்பாடு செய்து உத்தரவிட்டு இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.