என் தங்கச்சிக்கு வயிற்றுவலி - மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற அண்ணன் போக்சோவில் சிறையிலடைப்பு

 
பொ

சிறுமியை கர்ப்பமாக்கிய சகோதரரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார்.

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நித்திரவிளை மேற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஓட்டலில் நாகலாந்தைச் சேர்ந்த 35 வயது வாலிபர் வேலை பார்த்து வந்திருக்கிறார்.  இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் இரண்டு குழந்தைகள் நாகலாந்தில் இருக்கிறார்கள். 

 அந்த வாலிபர் மட்டும் நாகலாந்தில் இருந்து நித்திரவிளைக்கு வந்து  தங்கியிருந்து அந்த ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.   இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபரின் சகோதரி நித்திரவிளைக்கு வந்திருக்கிறார்.   அவர் வேலை நிமித்தமாக வந்ததாக தெரிகிறது.

கு

 இந்த நிலையில் திடீரென்று தனது  17வயது சகோதரிக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.   சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளனர்.   கர்ப்பமாக இருப்பது சிறுமி என்பதை தெரிந்து கொண்ட மருத்துவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியதில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் சகோதரர் தான் என்பது தெரியவந்தது.  இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 கர்ப்பமாக இருக்கும் சிறுமி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூடப்பிறந்த அண்ணனே சகோதரியை அதுவும் சிறுமியை கர்ப்பமாக்கி இருப்பது நித்திரவிளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.