சூர்யாவை போலீசாரால் காப்பாற்ற முடியாது -பதற்றத்தை அதிகரிக்கும் ஜெ.குரு மகன் கனலரசன்

 
ஜ்

சூர்யாவை ஐந்து துப்பாக்கி ஏந்திய போலீசாரால் காப்பாற்றிவிட முடியாது என்று எச்சரித்திருக்கிறார் மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ. குருவின் மகன் கனலரசன்.    அவர் மேலும் ஜெய் பீம் படம் விவகாரம் தொடர்பாக  பேசி பதற்றத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்.

க்க்

ஜெய்பீம் பட விவகாரத்தை வன்னிய சமூக மக்கள் மிக பொறுமையாக அமைதியாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.  பத்தாயிரம் பேர் ஒன்றுதிரண்டு சூர்யாவின் வீட்டின் முன்பு நின்றால் அவரால் எதுவும் செய்ய முடியாது.  ஐந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் சூர்யாவையும்,  இயக்குநர் ஞானவேலையும்  காப்பாற்றி விட முடியாது என்று எச்சரித்திருக்கிறார்.

 ஜெய்பீம் படத்தில் அந்த காட்சியில் காலண்டர் வைப்பதற்கான அவசியமே இல்லை.   வன்னிய சமூக மக்களை புண்படுத்திய சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் அவரால் எந்த படத்திலும் நடிக்க முடியாது.  தயாரிக்கவும் முடியாது.   இயக்குநர் ஞானவேல் வீட்டை விட்டு வெளியே வரவே முடியாது என்று கடுமையாக எச்சரித்து இருக்கிறார் கனலரசன்.

க்

 சூர்யா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று பாமக சார்பில் நோட்டீஸ் அனுப்பப் பட்டிருக்கும் நிலையில்,சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் படங்கள் வெளியிடும் திரையரங்குகளை கொளுத்துவோம் என்று ஜெ. குருவின் மருமகன் எச்சரிக்கை விடுத்து இருக்கும் நிலையில், மாவட்டம்தோறும் சூர்யாவின் படங்களை வெளியிட   பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  ஜெ. குருவின் மகன் கனலரசன் பதற்றத்தை மேலும்  அதிகப்படுத்தி இருக்கிறார்.