’’இந்த மூன்று சிறுகதைகள்தான் ஜெய்பீம் காட்சிகள் - அறிவுத்திருட்டில் சிக்கிய சூர்யா மன்னிப்பு கேட்கணும்’’

 
tஅ

தன்னிடம் உண்மையைச் சொல்லாமல் வசனம் எழுத வைத்த ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேலை கண்டித்து சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பி கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் எழுத்தாளர் கண்மணி குணசேகரன்.   இதை அடுத்து என் சிறுகதைகளை திருடித்தான், காட்சிகள் மாறாமல்  ஜெய்பீம் பட காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  மனசாட்சியோடு  எழுத்துக்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்.  சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருக்கிறார் எழுத்தாளர் செஞ்சி தமிழினியன் விவேகானந்தன்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

டம்

இருளர் வாழ்வியலாக காட்டப்பட்ட முதல் 15 நிமிடக் காட்சிகள் சில்லாக்கோல், ஒண்டிதச்சக்கதவு ஆகிய சிறுகதைகளை இணைத்து அப்படியே காட்சி மாறாமல் எடுத்துள்ளனர்.  கொடுமை என்னவென்றால், எழுத்தாளரின் ஊரிலயே படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறார்கள். மற்றொரு விசேஷம் என்னவென்றால் படைப்பாளரும் வன்னியர் தான். எழுத்தாளர் கண்மணி குணசேகரனும் வன்னியர்.    சாதிவெறி ஊர்த்தலைவருக்கு குணசேகரன் எனப்பெயர் வைத்ததோடு மட்டுமல் அல்லாமல்,  வசனம் எழுத வைத்த விவகாரத்தில் அவர் கொந்தளித்திருக்கிறார்.  

கடந்த 2019 ஆம் ஆண்டில் விதைநெல் பதிப்பகம் மூலம் ஊராகாலி என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் செஞ்சி தமிழினியன் விவேகானந்தன்.  இந்த நூல் திருப்பூர் இலக்கிய விருது இலக்கிய விருது , தமிழ் படைப்பாளி  பேரியக்க விருது, சௌமா இலக்கிய ஆகிய மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

 16 சிறுகதைகள் அடங்கிய ஊராகாலி தொகுப்பில் மூன்று சிறுகதைகள் பழங்குடி இருளர் சமூகத்தின் வாழ்வியலை ஒட்டி எழுப்பப்பட்ட உணர்வுகளாகும்.  அதில் எழுதப்பட்ட வாழ்க்கைச்சூழல் காட்சிகளை காட்சி மாறாமல் படமாக்கி இருப்பதை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் செஞ்சி தமிழினியன் விவேகானந்தன்.

க்க்

 அவர் மேலும்,   ‘’ஒரு சிறந்த படைப்பாளி படைப்பு எளிய மக்களை எளிய மக்களின் இன்னல்களை பொது சமூகத்திற்கு முன் வைப்பதில் ஒரு படைப்பாளியாக உங்கள் செயலை நான் விரும்பினேன்.   ஆனால் ஒரு எழுத்தை படைப்பை இந்த திரைப்படத்தில் கொண்டு வரும்போது சம்பந்தப்பட்ட அந்த படைப்பாளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டுமா இல்லையா?   திருடியபடைப்பில் படைப்பாளியின் சொந்த ஊரான செஞ்சி அருகே உள்ள பென்னகர் கிராமத்தை காட்ட வேண்டிய அவசியம் என்ன? அதிகாரத்தின் பக்கத்தில் இருக்கிறோம் என்கிற திமிறா?  சூர்யாவும்,  இயக்குனர் ஞானவேல் அவர்களும் சேர்ந்து செய்திருக்கிற அறிவுத் திருட்டை வன்மையாக கண்டிக்கிறேன்.   இதற்கு படைப்பாளியின் முன் வருத்தத்தையும் மன்னிப்பையும் நீங்கள் கேட்கவேண்டும்.   

 எளிய மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதில் திரைக் கலைஞர்களை விட எழுத்தாளரின் பங்கு அதிக மேன்மையானது.    திரைப்படம் முழுக்க அள்ளித் தெளித்து இருக்கின்ற அரசியல் குறித்து நான் பேசவில்லை.  காரணம் படைப்பாளிகள் மானுட விடுதலையை விரும்புகிறார்கள்.   நீங்கள் அறத்தோடு நடந்து கொள்ளுங்கள். ஒரு படைப்பை திருடுவது என்பது அறம் இல்லை.  ஒரு கலைஞனை மனம் நோக வைத்து நீங்கள் பெறும் கோடிகள் எதற்கும் பயன்படாது.   உங்களுக்கு மனசாட்சி இருந்தால் எழுதிய படைப்பாளிக்கு அவருடைய எழுத்துக்கு மரியாதை தாருங்கள்.  இது அந்த எளிய மக்களின் வாழ்வை எழுத்தில் கொண்டு வந்தவன் என்கிற கர்வத்தோடு வைக்கும் கோரிக்கை ’’என்று தெரிவித்துள்ளார்.