பள்ளி வளாகத்தில் மாணவி தற்கொலை முயற்சி -பாலியல் தொல்லை தந்தவர் பிடிபட்டார்

 
cஹ்

கோவை சின்மயா வித்யாலயா மாணவி தற்கொலை  சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் கோவையில் தனியார் பள்ளி வளாகத்தில் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது அம்மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . 

அந்த தனியார் பள்ளி வளாகத்தில் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.  இதை பார்த்துவிட்ட சக மாணவிகள் ஓடிச்சென்று ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க,   அவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

ப்ட்

 உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க,  போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து,  சிகிச்சை பெற்று வந்த மாணவியிடம் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கேட்டறிந்துள்ளனர்.  அப்போது மாணவி,   வீட்டில் தனியாக இருந்த நேரங்களில்  எல்லாம்  உறவினர் ஒருவர் தன்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொடுத்து வந்ததால்,  தான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும்,  அதனால் தான் பள்ளிக்கு வந்ததும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

 மாணவி அளித்த இந்த புகாரின் அடிப்படையில் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் மாணவியின் அந்த உறவினர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 சொந்த காரணங்களினாலோ,  மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் கைவிடுமாறு எத்தனையோ பேர்  அறிவுறுத்தி வரும் நிலையிலும் மாணவிகளின் இப்படியான முடிவுகள் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.