மாணவியின் காதலன் சிறையில் - மாணவியின் தம்பி சிறுவர் சீர்திருத்த பள்ளியில்

 
க்

கோவை மாநகராட்சியில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் கார்த்தி,  ஒண்டிப்புதூர் பகுதியில் மனைவி சரண்யா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.   இவர் வீட்டிற்கு அருகில் உள்ள கல்லூரி மாணவியுடன் கார்திக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. 

 இது சரண்யாவின் வீட்டாருக்கும் தெரியவந்ததும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.  இதனால்  வீட்டையே காலி செய்துவிட்டு மகளை அழைத்துக்கொண்டு பட்டணம் பகுதிக்கு சென்று விட்டார்கள் மாணவி குடும்பத்தினர்.

அதன்பின்னரும் ஒரு மாதமாக மனைவி சரண்யாவிற்கு தெரியாமல்  ரகசியமாக சென்று அந்த மாணவியை சந்தித்திருக்கிறார் கார்த்திக்.  தொடர்ந்து அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு பேசி வந்ததால் மனைவியையும் குழந்தையையும் கவனிக்காமல் இருந்திருக்கிறார்.

கொ

 இதனால் தனது வாழ்க்கையும் தனது குழந்தைகள் வாழ்க்கையும் பாழாகிப் போய் விடுமோ என்று நினைத்த சரண்யா இதுகுறித்து கணவன் மீது சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.  அதன் பின்னரும்  கார்த்திக் அந்த மாணவி நினைப்பாகவே இருந்ததால் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு அந்த பட்டணத்திலுள்ள அந்த கல்லூரி மாணவி வீட்டிற்கு சென்றிருக்கிறார் சரண்யா.

 அப்போது கார்த்திக் அந்த கல்லூரி மாணவி வீட்டில் தான் இருந்திருக்கிறார்.  இதனால் ஆத்திரமடைந்த சரண்யாவின் குடும்பத்தினர் கார்த்தியையும் கல்லூரி மாணவியையும் அடித்து உதைத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் .    வீடு புகுந்து தனது மகளை தாக்கியதாக கல்லூரி மாணவியின் தந்தை சூலூர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

 புகாரின் பேரில் கார்த்திக் - மாணவியின் குடும்பத்தினரை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.   அப்போது இரண்டு குடும்பத்தினரையும் கொஞ்சம் வெளியில் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.   வாசலில் நின்றிருந்த கல்லூரி மாணவியின் தம்பி 16 வயதான பள்ளி மாணவன் கார்த்திக்கை தாக்கியிருக்கிறார்.  பதிலுக்கு அவரும்  தாக்கியிருக்கிறார். 

 இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர்.  இதையடுத்து போலீசார் வெளியே வந்து   வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கார்த்திக்கை  சிறையில் அடைத்துள்ளனர். அந்த மாணவியின் தம்பியை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.