தெற்கு ரயில்வே அதிரடி - புறநகர் பயணிகள் அதிர்ச்சி

 
க்ல்

இரண்டு  டேஸ் தடுப்பூசி போட்டிருந்தால் தான் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.   தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

ர்ர்

 பொதுப் போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மெட்ரோ மற்றும் பேருந்துகளில் 50 சதவிகித மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது .  இந்த நிலையில் புறநகர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டை பிரிவு நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது .

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஒரு தகவல் .தற்போது இருந்தாலும் அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் வைத்திருந்தாலும் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,    இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான புதிய அடையாள அட்டையுடன் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும் .   பரிசோதனையின்போது இவற்றை காட்டினால் மட்டுமே அபராதத்தில் இருந்து,   தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 மேலும் முகக் கவசம் அணியாமல் ரயில் நிலையத்தில் நடமாடினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.