சேலம் ஆர்.ஆர். பிரியாணி கடை உரிமையாளர் தமிழ்ச்செல்வனுக்கு வந்த பிரச்சனை

 
rr rr

சேலம் ஆர்.ஆர். பிரியாணி கடை உரிமையாளர் தமிழ்ச்செல்வன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.

 தாம்பரத்தைச் சேர்ந்த ஜூலியஸ் இம்மானுவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பாக,  தன் வீட்டை  அபகரித்துக் கொண்டதோடு  தன் மீது கொலைவெறி தாக்குதலும் நடத்துகிறார் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்ச்செல்வன் மீது புகார் அளித்து இருக்கும் நிலையில் ஜூலியஸ் இம்மானுவேல் மீது தமிழ்ச்செல்வன் புகார் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்ச்செல்வன்,    தாம்பரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஜூலியஸ் இம்மானுவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன்.   நான் குடியிருந்த வீட்டை விற்க இம்மானுவேல் முடிவு செய்தார்.   அதனால் நானே அந்த வீட்டை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி 1.50 கோடி ரூபாய்க்கு பேசி முடித்தேன்.

rr

 இதையடுத்து முன் தொகையாக 75 லட்சம் ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்து விட்டேன்.   நான் தர வேண்டிய நீதி தொகைக்காக கோயம்பேடு , மதுரவாயல் சேலம் ஆர்.ஆர். பிரியாணி கடைகளை ஜூலியஸ் இம்மானுவேல் கவனித்துக் கொள்ள அனுமதி அளித்தேன்.   அந்த கடைகளில் வரும் லாபத்தில் சரிபாதியை பங்கு பிரித்துக் கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டோம் .  

அதன் பின்னர் 40 லட்சம் ரூபாய் செலவு செய்து அந்த வீட்டை புதுப்பித்தேன்.   சில மாதங்கள் கழித்து அந்த வீட்டினை கிரையம் செய்து கொடுக்கும்படி இம்மானுவேலுவிடம் கேட்டபோது அவர் மறுப்பு தெரிவித்தார்.  தொடர்ந்து அவர் மறுப்பு தெரிவித்து கொண்டே வந்த நிலையில் திடீரென்று வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார் .  இதன் பின்னர் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை நான் ஏமாற்றி அபகரித்துக் கொண்டதாகவும் , குண்டர்களை வைத்து அவரை மிரட்டுவதாகவும் என் மீது பொய் புகார் கூறியிருக்கிறார்.

srr

அதனால்தான்  நம்பவைத்து பண மோசடியில் ஈடுபட்ட ஜூலியஸ் இம்மானுவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,   எனக்கு சேர வேண்டிய வீட்டை கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என்றும்,  இல்லையென்றால் பணத்தை திருப்பித் தந்துவிட வேண்டும் என்றும்,  அதை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.