முதல்வருக்கு முருகன் அனுப்பிய நினைவூட்டல் மனு

 
ச்ச்ச்

  ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன் அவரது மனைவி நளினி இருவரும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். வேலூர் மத்திய சிறையில் இருவரும் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

 ஆண்கள் சிறையில் இருக்கும் முருகனும் பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் மாதம் ஒருமுறை மட்டும் நேரில் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  நளினியின் தாயார் நளினிக்கு பரோல் கேட்டு முயற்சித்து வந்தார். இது தொடர்பாக அவர் தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வரிடம் கோரிக்கை மனு  அளித்து வந்தார்.

மு

 இதையடுத்து நளினிக்கு 30 நாட்கள் பரோல் கிடைத்தது.  30 வருட சிறை வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த 5 வது பரோல் இது.   கடந்த டிசம்பர் 27ஆம் தேதியன்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்கியிருக்கிறார்.

 இந்தநிலையில் அவரது கணவர் முருகனும் தனக்குப்  பரோல் வேண்டி சிறைத்துறை மூலமாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.  அந்த மனுவில்,  என் மனைவி நளினி பரோலில் சிறையில் இருந்து வெளியில் செல்ல இருக்கிறார்.  அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.  அதேபோல் எனக்கும் சிகிச்சை தேவைப்படுகிறது.   இருவருக்கும் ஒரே நேரத்தில் பரோல் வழங்கினால் இருவரும் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வதற்கு சரியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

 தற்போது நளினி பரோலில் வெளியே சென்றிருக்கும் நிலையில் மீண்டும் முதல்வருக்கு நினைவூட்டல் மனு அனுப்பியிருக்கிறார் முருகன்.