இதனால்தான் மாஜி அமைச்சர் சரோஜாவை கைது செய்ய தடை

 
ச

முன்னாள் அமைச்சர் சரோஜாவை கைது செய்ய தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

முன்னாள்  சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜன் ஆகியோரிடம் சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்திற்காக பல்வேறு நபர்கள் களிடமிருந்து 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வசூலித்து கொடுத்ததாகவும்,  அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் சொன்னபடி யாருக்கும் பணிநியமனம் வழங்க வில்லை என்றும்,  கொடுத்த பணத்தையும் திரும்ப கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் சொல்லி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் குணசீலன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

ஜீ

 சரோஜாவிடம் 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்,  அவரது கணவரிடம் 50 லட்ச ரூபாய் கொடுத்ததாக குணசீலன் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.   இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் தங்களை கைது செய்ய கூடுமென்று முன்ஜாமீன் கோரி சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

 அந்த முன் ஜாமீன் மனுவில் ,  பணிநியமனம் வழங்குவதாக சொல்லி யாரிடமும் பணம் வாங்கவில்லை .  புகார் அளித்த குணசீலன் எங்கள் உறவினர்.  குடும்ப பகையின் காரணமாக எங்களுக்கு எதிராக பொய் புகார் அளித்து இருக்கிறார் என்று தெரிவித்திருந்தனர்.   சத்துணவு அமைப்பாளர்கள் தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அவர்களால் நியமிக்கப்பட்ட தாகவும் இந்த புகார் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் விசாரித்து உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் .

இந்த முன்ஜாமீன் மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா இதற்கு பதில் அளிக்க கால அவகாசம் கேட்டு கொண்டார்.   இதையடுத்து விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.  அதுவரைக்கும் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார்.