படப்பை குணா விவகாரத்தில் அடுத்தடுத்து சிக்கும் போலீசார்

 
கு

தொழிலதிபர்களின் அடுத்தடுத்த புகார்களால், குற்றச்செயல்கள் அதிகரிப்பதால்  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ரவுடிகள் தொல்லை அதிகரித்துவிட்டது என்று புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக திருவண்ணாமலை மாவட்ட எடிஎஸ்பி வெள்ளத்துரை நியமிக்கப்பட்டிருக்கிறார்.  அன்று முதல் வெள்ளத்துரை மூன்று மாவட்டங்களிலும்  குறிப்பாக தொழிநகரமான மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம்,  காஞ்சிபுரம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசுக்கு நீண்டநாளாக தலைவலியாக இருப்பவர் ரவுடி படப்பை குணா.  இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து அடிதடி நடத்துவது தொழிற்சாலைகளில் நிறுவனங்களை மிரட்டுவது,   சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு புகார்கள் குவிந்து வருகின்றன.  கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என்று 24 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.  பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றிருக்கிறார்.

கு

குணா மீது இருக்கும் வழக்குகளை எல்லாம் எடுத்து அதில் அவரை கைது செய்வதற்கு ஒருபக்கம் போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.  அதே நேரம்
 குணாவிற்கு போலீசில் இருந்துகொண்டே உதவி செய்ததாக சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் மகேஸ்வரியும்,  ரைட்டர் ராஜேஷும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

குணாவின் மீது உள்ள வழக்குகளை முடிப்பதற்கும் புகார்தாரர்களிடம் பேரம் நடத்துவதற்கும் கணிசமான தொகை மகேஸ்வரிக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.  அதேபோல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் குணாவின் மனைவி வெற்றிபெற வெற்றி பெற்றபோது மகேஸ்வரிக்கு புத்தம் புதிய லேப்டாப் போன்ற கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 அந்த லேப்டாப்பை காவல் நிலைய பணிகளுக்கு மகேஸ்வரியும், ராஜேஷும் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.  இதை அடுத்து ராஜேஷ் ஆயுதப்படைக்கும்,  மகேஸ்வரியை காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டது மாற்றப்படுகிறார்கள்.  இதையடுத்து அவருக்கு உதவி செய்த மேலும் பல போலீசார் அச்சத்தில் இருக்கிறார்கள்.

குணாவுக்கு யார் யாரெல்லாம் உதவி செய்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை தீவிர விசாரணை நடந்து வருகிறது.