பிப்ரவரியில் பேரறிவாளன் - மார்ச்சில் நளினி

 
nn

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் ,ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

 ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதியன்று தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.    இதன்பின்னர் செப்டம்பர் 11ஆம் தேதியன்று இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால் தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்றும் கூறி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

nn

 இந்த மனுவுக்கு தமிழ்நாடு உள்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில்,   அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவில் தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் தான் முடிவு எடுக்க தகுதியானவர் என்று கூறி,   ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததாகவும் அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் என்று கோரியிருந்தது மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 உச்சநீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளில் நளினியின் மனுவும் ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

per

 இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,   இதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் வர இருக்கிறது என்று தெரிவித்தார்.

 அரசு வழக்கறிஞரின் இந்த விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள், நளினி தொடர்ந்த வழக்கு விசாரணையை மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைத்தார்.   முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவும் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.