’’40 கோடி லாபத்தில் 4 கோடியாவது பார்வதிக்கு உரிமை உண்டு..சண்டை போட சக்தியில்லாத மக்களை யாரும் ஏமாற்றலாம்’’

 
ப்

பொய் வழக்கில் போலீஸ் சித்திரவதையினால் உயிரிழந்த ராஜாக்கண்ணுவின்   உண்மைச் சம்பவத்தை வைத்து தான் ஜெய் பீம் திரைப்படம் உருவாகியுள்ளது.  ராஜாகண்ணுவுக்கும் அவர் குறவர் இனத்திற்கும் இழைக்கப்பட்ட அநீதி தான் அப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.    இந்த படம் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் அந்த உண்மை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மறைந்த ராஜாகண்ணுவின் தனது மனைவி பார்வதிக்கு உதவ வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும்  கோரிக்கை விடுத்து வந்தனர்.

ப்ப்

பார்வதியை நேரில் சந்தித்து அவருக்கு வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் நடிகர் லாரன்ஸ்.  ராஜாக்கண்ணு மறைவை அடுத்து வாழ்ந்து வந்த வீட்டினை விட்டு  சென்னைக்கு அருகே புறநகரில் வசித்து வருகிறார்.   தான் வாழ்ந்து வந்த ஊரில் முதனை கிராமத்தில் அவருக்கு சொந்தமான நிலம் இருக்கிறது.  அந்த நிலத்தில் வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ள லாரன்ஸ்,    பூமி பூஜைக்கு தானே வந்து நடத்தி வைப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.  தற்போதைக்கு பார்வதியின் செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கியிருக்கிறார்.  மேலும் ராஜாக்கண்ணு மகனின் மனைவி  ஒரு மாற்றுத் திறனாளி என்பதை அறிந்து, அவர் கூலி வேலை செய்து பிழைத்து வருவதை அறிந்து அவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக இரண்டு லட்ச ரூபாய் பணம் தருவதாக உறுதியளித்திருக்கிறார்.

 இந்த நிலையில்,  ராஜாக்கண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.   அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில் பார்வதியம்மாள் அவர்களின் பெயரில் 10 லட்சம் ரூபாய் தொகையை டெபாசிட் செய்து அதில் இருந்து வருகிற வட்டித் தொகையை மாதந்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய முடிவு செய்திருக்கிறோம் அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகையை போய்ச் சேரும்படி செய்யலாம் மேலும் உழவர் சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா.

ச்ச்

10 லட்சம் ரூபாய் சூர்யா உதவி செய்தவதாக சொன்னதற்கு சிலர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில்,  சிலர் எதிரான கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.  ‘’ஒரு நபரின் விவகாரத்தை அவர் அனுமதியோடு உரிமை பங்கீட்டுக்கான ஒப்பந்தத்தோடு படமெடுப்பர்.அதை ஜெய்பீம் செய்யவில்லை. சூர்யா அமேசான் பல கோடி லாபம். பார்வதி உரிமை? 40 கோடி லாபத்தில் 4 கோடியாவது பார்வதிக்கு உரிமை உண்டு தானே! "சட்ட விவரமறியாத, சண்டை போட சக்தியில்லாத மக்களை யாரும் ஏமாற்றலாம்"!’’என்கிறார் மாரிதாஸ்.

m