இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் - அறிவுறுத்தும் பாஜக

 
m

சென்னை குரோம்பேட்டையில் எம்ஐடி கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது.   தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு கல்வி பயின்று வருகிறார்கள்.   விடுதியில் தங்கி கல்வி பயிலும் சில மாணவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

 எம்ஐடி கல்லூரி நிறுவனத்தில் உள்ள மாணவர்கள் 1417 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.   இதையடுத்து பாதிப்புக்குள்ளான மாணவர்களில் பலபேர் கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

n

 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்,  தாம்பரம் காவல் ஆணையர் ரவி ஆகியோர் குரோம்பேட்டை எம்ஐடி கல்வி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.   சுகாதார அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளும் உடன் இருந்துள்ளனர்.  

 கொரோனா பரவலை அடுத்து கல்வி நிறுவனத்திற்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா  அதிகமாவதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்திருக்கிறது.

 இந்த நிலையில்,   தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,  ’’சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று. இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். முகக்கவசம் அணியுங்கள். கைகளை நன்றாக கழுவுங்கள். தனி மனித இடைவெளி  மிக முக்கியம்’’என்று அறிவுறுத்தி இருக்கிறார்.