தோழியுடன் புதுப்பெண் ஓட்டம் - கணவன் அதிர்ச்சி

 
லொ

திருமணமான இரண்டு மாதங்களிலேயே தனது தோழியுடன் புதுப்பெண் மாயம் ஆகிவிட்டதால் கணவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்.  

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அடுத்த ஆசாரி விளை காலனியைச் சேர்ந்தவர் ரேணுகா.   இவரது மகள் மார்க்ரெட் ஜெர்ரி.  இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.   திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் மார்கரெட் ஜெர்ரி அதே பகுதியைச் சேர்ந்த அவரின் தோழி ஆசிகா என்பவருடன் கடைக்குச் சென்று விட்டு வருவதாக சொல்லி இருக்கிறார்.  

லொ

 தோழியுடன் தானே கடைக்கு செல்கிறார் என்று வீட்டினர் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.   நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை .  அதன்பின்னர் கடைத்தெரு, பஜார் என்றும்  நண்பர்கள் உறவினர்கள் வீடுகள் எங்கும் தேடி பார்த்தும் அவர்கள் இருவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை.   இதையடுத்து மார்க்ரெட்  தாயார் ரேணுகா வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

 புகாரின்பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து தோழிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.

 திருமணமான இரண்டு மாதங்களிலேயே மாயமாகிவிட்டார் மனைவி.   அதுவும் தோழியுடன் மாயமாகி விட்டாரே என்று அதிர்ச்சியில் உறைந்து  போய் இருக்கிறார் கணவர் ரமேஷ்.